தமிழ்நாட்டில் இனி திதி கொடுக்கவும் கட்டணம்.!! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி திருக்கோயில் மூலம் அக்னி தீர்த்த கடற்கரை அருகே பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு பரிகார பூஜை செய்வது வழக்கம். இதற்காக திதி நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் அக்னி தீர்த்த கடலில் குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அக்னி திருத்த கடற்கரை அருகே முன்னோர்களுக்கு பரிகார பூஜைகள் செய்ய கட்டண சீட்டு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தில தர்ப்பண பூஜைக்கு 200 ரூபாயும் பிண்ட தர்ப்பண பூஜைக்கு நான் ஒரு ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களிடமிருந்து வசூலிக்கப்படும் இந்த தொகையில் 60% பங்கு கோவில் நிர்வாகத்திற்கும் 40% பங்கு புரோகிதர்களுக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களிடம் ஏதேனும் ஆட்சேபனை இருக்கும் பட்சத்தில் வரும் மார்ச் 20 ஆம் தேதிக்குள் கோவில் நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fee collection for tithi in ramanatha Swamy temple


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->