மகளை கொன்றுவிட்டு தந்தை தூக்குப்போட்டு தற்கொலை..அரியலூரில் அதிர்ச்சி சம்பவம்!
Father hangs himself after killing his daughter Shocking incident in Ariyalur
தனது மகளை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ரவி, இவரது மகள்கள் ரஞ்சனி மற்றும் சந்தியா,இதில் மூத்த மகள் ரஞ்சனி பி.எஸ்சி. நர்சிங் படித்து வருகிறார். இளைய மகள் சந்தியா சமீபத்தில் வெளியான பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 520 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று இருந்தார்.
இந்த நிலையில் இவர்களின் தந்தை ரவி அப்பகுதியில் புதிதாக வீடு கட்டிவருவதால் மனைவி மற்றும் மகள் ரஞ்சனி ஆகியோர் வீட்டு வேலைகளை கவனித்து வந்தனர். இளைய மகள் சந்தியா வீட்டில் சமையல் செய்து தாயார் மற்றும் அக்காளுக்கு அனுப்பி வந்துள்ளார்.
சம்பவத்தன்று நேற்று மதியம் வெகுநேரமாகியும் வீட்டிலிருந்து உணவு வராததால் தாயும் ,மகளும் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது சந்தியா கயிற்றால் கழுத்தை இறுக்கியும், ரவி தூக்கில் தொங்கியவாறும் பிணமாக கிடந்ததனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அலறி துடித்தனர்.
மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.அப்போது தந்தை-மகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ரவி தனது மகளை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு பின்னர் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தனது மகளை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Father hangs himself after killing his daughter Shocking incident in Ariyalur