அரியலூர்.. பருத்திக்கான நேரடி கொள்முதல் நிலையம்.! விவசாயிகள் வேண்டுதல்.!  - Seithipunal
Seithipunal


அரியலூர்  மற்றும் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளின் வாழ்வதாரமாக மக்காச்சோளம், பருத்தி, மிளகாய், மல்லி ஆகிய பல பயிர்கள் பயிரடப்படுகின்றது. இதில் பருத்தி எண்ணிக்கை என்பது அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் சற்று அதிகமாக இருக்கும்.

அரியலூர் மாவட்டத்தில் பயிரடப்படுகின்ற மிளகாய், மக்காச்சோளம், மல்லி போன்ற பயிர்களுக்கு மறைமுக ஏலமுறையில் அரியலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் வாயிலாக  தினந்தோறும் ஏலம்  நடத்தப்பட்டுள்ளது. 

இருப்பினும், பருத்திக்கு என தனியாக ஏலம் எதுவும் நடைபெறவில்லை. எனவே, உரிய விலை கிடைக்காத காரணத்தால் வெளிசந்தையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யக்கூடிய நிலையில் நாங்கள் இருக்கின்றோம். 

தற்போது அருகில் உள்ள திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை கடலூர் போன்ற மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலும், இந்திய பருத்தி கழகத்தால் தினந்தோறும்  நடைபெறும் மறைமுக ஏலத்தில் விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச விலையாக ரூ.52.78 முதல் ரூ.55.50 வரை கொள்முதல் செய்கின்றனர்.

எனவே, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதோடு, விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியும் அடைந்துள்ளார்கள். எனவே, அறியலூர்க்கென்று பிரத்யேகமாக பருத்தி நேரடி கொள்முதல் நிலையங்களை அளிக்க கோரி விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

farmers reqeusts to get direct purchase center in ariyalur


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->