அன்னூர் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்..!! கோவை விவசாயிகள் கோரிக்கை..!!
Farmers demand Annur area declared as a protected agricultural zone
கோவை அடுத்த அன்னூர் பகுதியில் டிட்கோ மூலம் தொழிற்பேட்டை அமைக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் பகுதி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் பலதரப்பட்ட மக்களின் அழுத்தத்தின் காரணமாக விவசாய நிலம் அல்லாத தரிசு நிலங்களையும், அரசு புறம்போக்கு நிலங்களையும் கையகப்படுத்தவதாக தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில் கோவை மாவட்ட விவசாயிகள் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பேசிய போராட்டக் குழு தலைவர் "கடந்த 1989ம் ஆண்டு 350 ஏக்கரில் தனியாரால் துவங்கப்பட்ட தொழில் பூங்காவுக்கு உதவி செய்யாத அரசு இப்பொழுது புதிய தொழில் பூங்கா அமைத்து என்ன பயன்..? அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

அன்னூர் பகுதியில் தொழில் பூங்கா அமைக்கும் திட்டத்தை அரசு முழுமையாக கைவிட வேண்டும். எங்கள் போராட்டத்தை சட்டரீதியில் எதிர் கொள்ளவும் தயாராக உள்ளோம். எங்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இருப்பினும் எங்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் கடுமையாக எதிர்க்க தயாராக உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
English Summary
Farmers demand Annur area declared as a protected agricultural zone