பல்லடம் அருகே கல்குவாரியை மூடக்கோரி விவசாயி உண்ணாவிரதம்! - Seithipunal
Seithipunal


திருப்பூரை மாவட்டம், பல்லடத்தை கோடங்கி பாளையம் அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு கல்குவாரியை மூடக்கோரி விவசாயி ஒருவர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.

 

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம் கோடங்கி பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில், இவர் அவரது தோட்டத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது,

"எங்களது தோட்டத்துக்கு அருகில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில், கனிமவளத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளையும், நிபந்தனைகளையும் மீறி இந்த குவாரி சட்டவிரோதமாக செயல்பட்டு வருகிறது.

இது குறித்து பல முறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மேலும், இந்த கல்குவாரிக்கு புதியதாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் கல்குவாரிக்கான அனுமதியை ரத்து செய்து குவாரியை மூடும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன்". என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Farmer hunger strike near Palladam demanding closure quarry


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->