இடப்பிரச்சனையில் பெண் மீது தாக்குதல்.! விவசாயி கைது.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இடப்பிரச்சனையில் பெண்ணை தாக்கிய விவசாயியை போலீசார் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டியாம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி குப்புசாமி(45). இவரது மனைவி அலமேலு. அதே பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சரிதா. இந்நிலையில் குப்புசாமி வீட்டாருக்கும், அருகிலுள்ள முருகன் வீட்டாருக்குமிடையே இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. 

இதையடுத்து நேற்று முருகனின் மனைவி சரிதா வீட்டின் முன்பாக வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது குப்புசாமியின் மனைவி அலமேலு வந்து ஏன் என் வீட்டின் முன் வேலை செய்கிறாய் என்று கேட்டு தகராறு செய்துள்ளார்.

இருவருடைய தகராறு முற்றிய நிலையில், ஒருவருக்கொருவர் தகாத வார்த்தையால் திட்டிக் கொண்டனர். அப்போது அங்கு வந்த குப்புசாமி, மனைவி அலமேலுடன் சேர்ந்து முருகனின் மனைவி சரிதாவை தகாத வார்த்தையால் திட்டி அடித்து கீழே தள்ளியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த சரிதா இந்த சம்பவம் குறித்து திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், குப்புசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலை மறைவாக உள்ள குப்புசாமியின் மனைவி அலமேலுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Farmer arrested for attacking woman in land dispute in kallakurichi


கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வைAdvertisement

கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வை
Seithipunal