கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.. கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் இதர கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்சி), பி.வி.எஸ்சி - ஏ.ஹெச்) 480 இடங்கள் இருக்கின்றன. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 72 இடங்கள் (15 சதவீதம்) போக, மீதமுள்ள 408 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.

Bachelor of Veterinary Science & Animal Husbandry - B.V.Sc & AH (5 ஆண்டுகள்),
B.Tech., Food Technology (4 ஆண்டுகள்),
B.Tech., Poultry Technology (4 ஆண்டுகள்),
B.Techm, Dairy Technology (4 ஆண்டுகள்) என்ற 4 வகையான படிப்புகளில் சேர https://adm.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் செப்டம்பர் 12-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று  அறிவிக்கப்ட்டிருந்தது.

இந்த நிலையில், விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்டோபா் 3-ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Extension of time to apply for veterinary course


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->