கோவையில் பரபரப்பு...பாஜக நிர்வாகிக்கு சரமாரி வெட்டு...முன்விரோதம் காரணமா?
Excitement in Coimbatore BJP executive cut barrage Is it due to antagonism
கோவை மாவட்டம், வடவள்ளி சாலையில் உள்ள சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார், ஆர்.எஸ்.புரம் பகுதி பாஜக இளைஞர் அணி செயலாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், ஆர்.எஸ்.புரம், பூ மார்க்கெட் பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் சதீஷ்குமார் வேலை செய்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது, நான்கு பேர் கொண்ட கும்பல் அலுவலகத்துக்குள் புகுந்து, சதீஷ்குமாரை ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், சதீஷ்குமாரின் இரண்டு கைகளின் மணிக்கட்டுகளிலும் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்த சதீஷ், சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, ஆர்.எஸ். புரம் போலீஸார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மற்றொரு கும்பலுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மர்ம கும்பலால் செவ்வாய்க்கிழமை இரவு தாக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள ஆர்.எஸ் புரம் போலீசார், சந்தேகத்தின் பேரில் எரியூட்டி வேலு என்பவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர், எரியூட்டி வேலு மற்றும் சரவணன் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Excitement in Coimbatore BJP executive cut barrage Is it due to antagonism