பரபரப்புக்கு மத்தியில் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ.! ஜி.கே வாசன்.!
ex mla kathirvel left tmck party
மக்களவைத் தேர்தலில் போட்டியிட பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு (ஈரோடு, தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூர்) 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, ஈரோடு தொகுதிக்கு விஜயகுமாரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு வேணுகோபாலும் போட்டியிடுவார்கள் என்று கட்சியின் தலைவர் ஜிகே வாசன் அறிவித்தார்.

ஆனால், தூத்துக்குடி தொகுதியில் வேட்பாளராக யாரை அறிவிக்கலாம் என ஜிகே வாசன் ஆலோசித்து வந்தார். திமுக சார்பில் தற்போதைய சிட்டிங் எம்பியாக இருக்கும் கனிமொழியும், அதிமுக தரப்பில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். இந்த நிலையில், தான் தூத்துக்குடி தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், விஜயசீலன் போட்டியிடுவார் என்று ஜிகே வாசன் அறிவித்தார்.
இதனால் அதிருப்தியடைந்த, முன்னாள் எம்.எல்.ஏவும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்த கதிர்வேல், அக்கட்சியில் இருந்து திடீரென விலகியுள்ளார். மேலும், பாஜக கூட்டணியில் சீட் வாங்கி, அதனை அதிக விலைக்கு ஜி.கே.வாசன் விற்று வருகிறார் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
English Summary
ex mla kathirvel left tmck party