தமிழகத்தில் மாவட்டம் தோறும் மாலை நேர உழவர் சந்தை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மாவட்டம் தோறும் ஒரு இடத்தில் ஆக.12தேதி முதல் மாலை நேர உழவர் சந்தைகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். 

தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு உழவர் சந்தை மாலை நேரத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதிநிலை அறிக்கையின்போது உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டார். 

அதன்படி, ஆக.12-ம் தேதி முதல் மாவட்டத்துக்கு ஒரு உழவர் சந்தை வீதம் 37 இடங்களில் (சென்னை தவிர) தினமும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட உள்ளன. இங்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும். 

ஆக.12-ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி மூலம் இவற்றை திறந்து வைக்கிறார். திருச்சி, தஞ்சாவூர், கரூர் உள்ளிட்ட சில இடங்களில் முன்னோட்டமாக மாலை நேர உழவர் சந்தைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Evening uzhavar santhali open in tamilnadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->