விஜய் NDA கூட்டணியில் இணைந்தாலும் ஸ்டாலினை வீழ்த்துவது கடினம்! எடப்பாடி பழனிசாமியை கடுமையாக சாடிய முன்னாள் எம்.பி கே.சி. பழனிசாமி! - Seithipunal
Seithipunal


விஜய்யின் தவெக கூட்டணியை நம்பி, அதிமுகவின் சுயபலத்தை எடப்பாடி பழனிசாமி குறைத்து மதிப்பிடுகிறார் என்று முன்னாள் எம்.பி கே.சி. பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். அதிமுக தனித்தே நின்று வெல்லும் வலிமையை நிரூபிக்க வேண்டிய நேரம் இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் தள பதிவில் கே.சி. பழனிசாமி கூறியதாவது — அதிமுக–பாஜக கூட்டணி இருந்தபோது அது ஒரு வெற்றிக்கூட்டணியாகவே பார்க்கப்பட்டது. அப்போது விஜய்க்கு 10 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்றும், அதில் பெரும்பாலானவை திமுக வாக்குகளாகவே இருக்கும் என்பதால் அது அதிமுகவின் வெற்றியை பாதிக்காது என்ற நம்பிக்கையே கட்சியினரிடம் இருந்தது. ஆனால் பின்னர் அதிமுகவை ஒன்றிணைக்க முடியாது என்ற முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்தார். அதன்பின் கரூர் சம்பவத்திற்கு பிறகு, தவெக கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அந்த கூட்டணி உறுதி செய்யப்படாமலிருந்த நிலையிலும் “பிள்ளையார் சுழி போட்டாச்சு” என்று கூறிய எடப்பாடி, தமக்கே சாதகமான பிம்பத்தை உருவாக்க முயன்றார் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது — உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு உள்ளிட்ட சிலர் தவெக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தும் நிலைக்கு சென்றார்கள். இதன் விளைவாக, தவெக பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜுனா “எதிர்க்கட்சிகள் எங்களை அழைக்கிறார்கள்” என்று விமர்சிக்கும் அளவுக்கு அதிமுக அவமானப்படுத்தப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் எடப்பாடி பழனிசாமியின் தவறான அரசியல் முடிவுகள் தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தன்னை தானே தோற்கடித்துக் கொள்கிறவர் எடப்பாடி பழனிசாமி தான் என்றும் கே.சி. பழனிசாமி கூறியுள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தலில் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்காமல் இருந்திருந்தால், அதிமுக இன்று ஆட்சியில் இருந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இப்போது எடப்பாடி பழனிசாமி விஜய்யின் கூட்டணியே வெற்றிக்கு வழி என்ற பிம்பத்தை உருவாக்கி விட்டார் என்றும் அவர் சாடியுள்ளார்.

மேலும், விஜய்யின் நோக்கம் வெறும் கூட்டணி அல்ல, முதல்வராக மாறுவதே என அவர் தெரிவித்துள்ளார். ஒருவேளை விஜய் NDA கூட்டணியில் இணைந்தாலும், திமுக அதற்கான வியூகத்தை ஏற்கனவே அமைத்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் திமுக பக்கம் செல்லும் வாய்ப்பும், ஓ.பி.எஸ் கூட திமுகவுடன் இணையலாம் என்ற சாத்தியமும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதிமுக தனித்தே நின்று வெற்றிபெறும் வலிமையை மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்றும், கட்சியின் பெருமையை மக்கள் மத்தியில் மீட்டெடுக்க வேண்டிய நேரம் இதுவே என்றும் கே.சி. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். விஜய் தனியாக போட்டியிட்டாலும் அதிமுக எதிர்த்து வெல்லும் வலிமை கொண்ட கட்சி தான்; அந்த வலிமையை எடப்பாடி பழனிசாமி நிரூபிப்பாரா என்ற கேள்வியுடன் தனது பதிவை அவர் நிறைவு செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Even if Vijay joins the NDA alliance it will be difficult to defeat Stalin Former MP KC Palaniswami strongly criticized Edappadi Palaniswami


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->