மனைவிக்கு தங்க தாலி வாங்க, தோழியின் கழுத்தறுத்த கொடூரன்.. நகைக்காக வில்லனாக மாறிய பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


மனைவி தங்க நகை கேட்ட நிலையில், நகைவாங்க பணம் கொடுக்க மறுத்த பெண் தோழியை கொடூரன் கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வ.உ.சி பூங்கா விநாயகர் தெரு பகுதியை சேர்ந்தவர் ரேகா. இவரின் கணவர் ரமேஷ். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு, சேலம் பனைமரத்துப்பட்டி பகுதியில் வசித்து வந்துள்ளனர். 

சம்பவத்தன்று தனது தாய் வீட்டு அருகே உள்ள தனது தோழியின் புதுமனை புகுவிழா வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த விழாவிற்கு சென்று விட்டு தாய் வீட்டில் தனியாக இருந்த நிலையில், அவரது வீட்டில் புகுந்த மர்ம ஆசாமி அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளான். மேலும், கழுத்தில் இருந்த ஐந்தரை சவரன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளான். 

இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ரேகாவுடன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த செல்வகுமார் என்பவர் விசாரணை வளையத்தில் வந்துள்ளார்.  இதனையடுத்து செல்வகுமாரை கைது செய்து விசாரணை செய்கையில், அவளிடமிருந்த ஐந்தரை சவரன் தாலி சங்கிலி மீட்கப்பட்டது. 

விசாரணையில், ரேகாவுடன் பணிபுரிந்த நாட்களில், இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்து வந்துள்ளது. செந்தில் குமாருக்கு அவ்வப்போது பணம் தேவைப்படும் சமயத்தில், ரேகா பண உதவி செய்து வந்துள்ளார். ரேகாவிற்கு தற்போது திருமணம் ஆகியுள்ளதால், செல்வகுமாருக்கு பணம் எதுவும் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில், புதுமனை புகுவிழாவிற்கு தனது மனைவியுடன் சென்ற செந்தில் குமார், தனது தோழிகள் மற்றும் நண்பர்களுடன் தனது குடும்பத்தினரை அறிமுகம் செய்துள்ளார். இதன் போது, அவர்களின் கழுத்தில் தங்கத்தில் தாலி சங்கிலி இருந்ததாக கூறப்படுகிறது. இதன்பின்னர் வீட்டிற்கு சென்ற செந்திலின் மனைவி, அனைவரும் தங்கச்சங்கிலி வைத்துள்ளார்கள், என்னிடம் ஒன்றுமே இல்லை என்று கூறி திட்டியதாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த செந்தில் குமார், தனது இருசக்கர வாகனத்தில் ரேகாவின் வீட்டிற்கு சென்று, தங்க நகை வாங்க வேண்டும் என்றும், தனது மனைவி திட்டுகிறாள் என்றும், பணம் கேட்டு கோரிக்கை வைத்துள்ளான். ஆனால், தற்போது என்னிடம் தங்க நகை வாங்கும் அளவிற்கு பணம் இல்லை என்று கூறவே, ரேகாவின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயற்சித்துள்ளான். இதனால் ஏற்பட்ட சண்டையில் கொலை அரங்கேறியுள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Erode Woman Murder by his Boy Friend Police Investigation


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->