கர்ப்பிணியாக இருந்தும் நான் அனுபவித்த துயரங்கள்.. காமக்கணவனை கொலை செய்த மனைவி கண்ணீருடன் பரபரப்பு வாக்குமூலம்.! - Seithipunal
Seithipunal


அந்தியூர் அருகே கணவனுக்கு விஷம் வைத்து கர்ப்பிணி மனைவியை கொலை செய்த விவகாரத்தில், பேரதிர்ச்சி தகவலானது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் காலனி மைக்கேல்பாளையம் பகுதியைச் சார்ந்தவர் நந்தகுமார். இவருக்கு 3 ஏக்கர் விவசாய நிலம் இருக்கும் நிலையில், விவசாய நிலத்திற்கு அருகிலேயே வீடுகட்டி தங்கி வருகிறார். அவ்வப்போது, அங்குள்ள மாவு மில்லில் வேலைக்கு சென்று வந்துள்ளார். 

35 வயதாகியும் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தவித்து வந்த நந்தகுமாருக்கு, கடந்த 7 மாதங்களுக்கு முன்னதாக மைதிலி என்ற பெண்ணுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நந்தகுமார், நான் சாப்பிட்ட உணவு கசந்தது என்றும், வயலுக்கு வாங்கி வைத்துள்ள பூச்சிமருந்து வாசனை உணவில் வீசியதாகவும் தெரிவித்துள்ளார். 

இதன்பின்னர் சிகிச்சை பலனின்றி நந்தகுமார் உயிரிழந்த நிலையில், நந்தகுமாருக்கு உணவில் விஷம் கலந்தது பிரேத பரிசோதனையில் உறுதியானது. விசாரணையில், கர்ப்பிணி மனைவி மைதிலி விஷம் வைத்து கணவனை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து உண்மையை ஒப்புக்கொண்ட மைதிலி காவல் துறையினரிடம் கண்ணீருடன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

இது குறித்து அவர் தெரிவிக்கையில், " 35 வயதான நந்தகுமாருக்கும், ஏற்கனவே 15 வயதில் திருமணம் முடிந்து கணவரை பிரிந்து வாழ்ந்து மைதிலியான (வயது 20) எனக்கும் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் செய்த புதிதில், தாம்பத்திய விஷயத்தில் மகிழ்ச்சியாக இருக்க முடியாமல் அவதிப்பட்டார். பின்னர், அவரது நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி மருத்துவரை சந்தித்து மருந்துகளை எடுத்துக்கொண்டார். 

தாம்பத்தியம் தொடர்பான மருந்துகளை அளவுக்கு அதிகமாக எடுத்ததாகவும் தெரியவருகிறது. இதனால் முதலில் நான் கர்ப்பிணியாக மாறினாலும், காமுகன் இரவு பகல் பாராது, கர்ப்பிணி பெண் என்றும் பாராது பாலியல் தொல்லை கொடுத்து வந்தான். அவனால் நான்பட்ட துயரங்கள் விவரிக்க இயலாதவை. ஒரு சமயத்தில் கொடுமையை வெளியே சொல்ல முடியாமலும், தாங்க முடியாமலும் வயலுக்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை உணவில் கலந்து கொடுத்து கணவனை கொலை செய்தேன். 

இதனை சாப்பிட நந்தகுமார் வயிற்றுவலியால் மருத்துமனையில் அனுமதி ஆகிய நிலையில், சிகிச்சை பலனின்றி பலியானார். பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் காவல்துறை விசாரணை குறித்த பயத்தால் இறுதியில் உண்மையை ஒப்புக்கொள்ளும் சூழ்நிலைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன் " என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

தாம்பத்தியம் ரீதியான பிரச்சனைகளுக்கு மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள அளவை விட அதிகளவு எடுத்தால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பது இதன் மூலமாக வெளிச்சமாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Erode Pregnant girl Murdered Husband due to Sexual Torture Full Investigation Report


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->