ஸ்டாலினும் தெரியாது, பாஜகவும் தெரியாது.. பாஜகவில் இணைய வந்த முதியவரால் சிரிப்பலை.!
Erode BJP Party Peoples Joining Function Comedy
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆவுடையார்பாறை கிராமத்தைச் சேர்ந்த முதியவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நிலையில், அவர் தனக்கு அப்படி ஒரு கட்சியை இருக்கிறது தெரியாது என்று கூறியது அங்குள்ள பாரதிய ஜனதா கட்சியினர் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
மேலும், அவர் அணிந்து வந்திருந்த பனியனில் மு.க ஸ்டாலினின் முகம் இருந்த நிலையில், மு.க ஸ்டாலின் திமுக தலைவர் என்பதை கூட தெரியாமல் குளிருக்கு பனியன் போட்டுள்ளதாக கூறியது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆவுடையார்பாறை கிராமத்தில், மாற்று கட்சியினர் பாஜக கட்சியில் இணையும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் விவசாய அணி தலைவர் ஜி.கே நாகராஜ் முன்னிலையில், தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், மு.க ஸ்டாலின் பனியன் அணிந்த 70 வயது முதியவர், பாஜகவில் இணைய உள்ளதாக கூறி அழைத்து வரப்பட்டார். ஆனால், அவருக்கு பாஜக கட்சியை தெரியாது என்றும் கூறப்படும் நிலையில், முதியவரிடம் தங்களது கட்சியின் பெருமைகளை எடுத்துக் கூறிய நாகராஜ், பாஜகவின் சின்னம் மற்றும் பாஜகவின் தலைவர் என்று பலர் தொடர்பான தகவலை தெரியப்படுத்தினர்.
அப்போது, அந்த முதியவர் அவர்கள் எல்லாம் யார் என்றே எனக்கு தெரியாது என வெள்ளந்தியாக பதில் தெரிவிக்கவே, நாட்டிற்காக பாஜக செய்துள்ள பல விஷயங்களை கூறி காவி துண்டு அணிவித்து முதியவரை கட்சியில் இணைத்துக் கொண்டார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Erode BJP Party Peoples Joining Function Comedy