ஈரோட்டில் அம்மா உணவாக ஊழியர்கள் தீடீர் போராட்டம்!
erode amma unavagam workers sudden strike
ஈரோடு: அகில் மேடை வீதியில் அம்மா உணவகம் தொடர்ந்து 11 வருடமாக செயல்பட்டு வருகிறது. அதில் சுய உதவி குழுவை சேர்ந்த10 பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த ஊழியர்கள் அனைவரும் தங்களுக்குள் வேலைகள் அனைத்தையும் பகிர்ந்து செய்து வருகின்றனர். இந்த அம்மா உணவகத்தில் மேலும் 2 பெண் ஊழியர்கள் கடந்த மாதம் கூடுதலாக பணியில் சேர்க்கப்பட்டனர்.
அந்த இரண்டு பெண் ஊழியர்களும் சேர்ந்த முதல் நாளிலிருந்து டோக்கன் போடும் வேலையை மட்டுமே செய்வதால், மற்ற ஊழியர்கள் அவர்களிடம் நீங்களும் அனைத்து வேலைகளையும் மற்றவர்கள் போல செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
ஆனால், வழக்கம் போல் டோக்கன் வழங்கும் வேலை மட்டும் அந்த 2 ஊழியர்கள் செய்து வந்ததால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, இன்று காலை மற்ற 10 ஊழியர்களும் உணவை பரிமாறாமல் இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் காலை உணவு சாப்பிட வந்த பொதுமக்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்ததால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த சுகாதார ஆய்வாளர் மணிவேல் மற்றும் அதிகாரிகள் வந்து போராட்டம் நடத்திய ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அந்த 2 ஊழியர்களும் மற்றவர்கள் போல் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும் என்று கூறினர்.
பின்னர் அதிகாரிகள், பிரச்சினைகளை பேசி தீர்த்துக்கொள்ளலாம், முதலில் பொதுமக்களுக்கு உணவை பரிமாறுங்கள் என்றனர். இதனை அடுத்து அம்மா உணவக ஊழியர்கள் பணியை தொடங்கினர். இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு காலை உணவு தாமதமாக பொதுமக்களுக்கு பரிமாறப்பட்டது.
English Summary
erode amma unavagam workers sudden strike