மறைந்த அதிமுக தலைவர்கள் நினைவிடத்தில் ஈபிஎஸ் மலர் தூவி மரியாதை..!! - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு குறித்த இருதரப்பு வாதங்களும் கடந்த 22ம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பின் படி அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 4 இடைக்கால மனுக்களும் நிராகரிப்பட்டது.

மேலும், பொதுக்குழு மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று அதிமுக தலைமை கழகம் அறிவித்தது.

இதனால், அதிமுக தொண்டர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு  இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

இதையடுத்து, அதிமுகவின் புதிய பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி சென்னை காமராஜர் சாலையில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அதிமுக தொண்டர்கள் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று கோஷமிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS respect in MGR and JEYALALITHA memorial place


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->