மெத்தன போக்கில் விடியா அரசு.. "22 மீனவர்களை உடனடியாக மீட்டு தாங்க".. மத்திய அமைச்சருக்கு ஈபிஎஸ் கோரிக்கை..!! - Seithipunal
Seithipunal


நெடுந்தீவு அருகே 3 விசைப்படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 22 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இன்று காலை கைது செய்ததோடு மீனவர்களின் 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 22 தமிழக மீனவர்களையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்துள்ள இலங்கை கடற்படையினருக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் தமிழக மீனவர்களை உடனடியாக மீட்பதற்கான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கர் அவர்களை கேட்டுக் கொள்வதுடன், எப்போதும் மெத்தனப் போக்கை மட்டுமே கடைபிடிக்கும் இந்த விடியா அரசு தமிழக மீனவர்களை மீட்கும் நடவடிக்கையில் விரைந்து ஈடுபடுவதுடன், அவர்கள் விடுவிக்கப்படும் வரை அவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான நிவாரண உதவிகளை முழுமையாக வழங்கும்படியும் வலியுறுத்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS requests Union Minister to release 22 fishermen arrested by SriLanka Navy


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->