ஈபிஎஸ் அதிரடி..பள்ளி சிறுமிக்கு "பாலியல் வன்கொடுமை".. அதிமுகவின் முக்கிய புள்ளி கட்சியிலிருந்து நீக்கம்..!! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, வைகை நகரை சேர்ந்த சிகாமணி பரமக்குடி நகர அதிமுக அவைத் தலைவராக பதிவி வகிக்கும் இவர் நகராட்சி 3வது வார்டு அதிமுக கவுன்சிலராக இருந்து வருகிறார். ஜி.எஸ் சிட்டி லேண்ட் ப்ரோமோட்டர்ஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வரும் இவர் மாதவன் நகரில் வசித்து வரும் ராஜாமுகமது என்பவருடன் சேர்ந்து 9ம் வகுப்பு படிக்கும் சிறுமியை தனது காரில் கடத்தி சென்று பார்த்திபனூர் பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் சிகாமணி, ராஜாமுகமது, புதுமலர் பிரபாகரன், கயல்விழி, உமா ஆகியோரை போலீசார் கைது செய்த நிலையில் சிகாமணி, ராஜாமுகமது, புதுமலர் பிரபாகரன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 

இந்த நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பரமக்குடி நகர கழக அவைத்தலைவர் சிகாமணியை அக்கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "கழகத்தின் கொள்கை குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் சிகாமணி இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் அவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்" என அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS removed admk counselor from party who arrested in pocso


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->