ஆட்டிப் படைக்கும் அமலாக்கத்துறை - சென்னையில் பல்வேறு இடங்களில் சோதனை.!!
enforcement department raide in chennai
தலைநகர் சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதாவது அண்ணா சாலை, பெசன்ட் நகர், தேனாம்பேட்டை, சேத்துப்பட்டு, தி.நகர், சூளைமேடு, மணப்பாக்கம் ஆகிய இடங்களில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடைபெறுகிறது.

அதிலும் குறிப்பாக சென்னை மணப்பாக்கம் சி.ஆர். புரத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டிலும், சென்னை சூளைமேடு கல்யாணபுரத்தில் உள்ள எஸ்.என்.ஜே. மதுபான நிறுவன அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சோதனை கடந்த மார்ச் மாதம் டாஸ்மாக் மது விற்பனை விவகாரத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் படி டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதையடுத்து மீண்டும் நடைபெறுகிறது.
English Summary
enforcement department raide in chennai