இசை நிகழ்ச்சியுடன் நடைபெறும் நிறைவு விழா.! ஒரே மேடையில் கலக்கும் மோடி, அண்ணாமலை.! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாநிலம் முழுவதும் ’என் மண் என் மக்கள்’ என்ற பாதயாத்திரை மேற்கொண்டார். இந்த பாதயாத்திரையின் நிறைவு விழா மற்றும் பொதுக்கூட்டம் திருப்பூர் மாவட்ட பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் இன்று துவங்கியது. இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். 

அவருடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன். பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், பாஜக மூத்த தலைவர்கள் எச்.ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக எம்.எல்.ஏ.,க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். 

பிரதமர் வருகையை முன்னிட்டு, மாதப்பூர் பகுதியில் எட்டு எஸ்.பி.களின் நேரடி கண்காணிப்பில் 6,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இந்த கூட்டத்தில் சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குவிந்துள்ளனர். தொண்டர்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவதற்காக தொப்பிகள் வழங்கப்பட்டுள்ளது. 

பொதுக் கூட்ட மைதானத்தை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பொதுக் கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் அனைவரும், தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தொண்டர்களின் பாதுகாப்பு கருதி பத்து தீயணைப்பு வாகனங்கள், முப்பது ஆம்புலன்ஸுகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பொதுக் கூட்ட நிகழ்ச்சிகளை பொதுமக்கள் மற்றும் தொண்டா்கள் பாா்வையிடும் வகையில் 50 பெரிய எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கூட்டத்திற்கு வரும் தொண்டர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். தீப்பெட்டி, லைட்டர், பவர் பேங்க், சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் பொதுகூட்டம் நடைபெறும் வளாகத்திற்கு எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் தொண்டா்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஜமாப் இசை இசைக்கப்பட்டு வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

en man en makkal closing ceremony in palladam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->