நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு வலியுறுத்தல்! மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% வரிப்பகிர்வு வழங்க வேண்டும்! - முதலமைச்சர் - Seithipunal
Seithipunal


டெல்லியில், பிரதமர் மோடி தலைமையில் நடந்த ''நிதி ஆயோக்'' கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50 % வரிப்பகிர்வு வழங்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:

மேலும் இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் என்னவென்றால்,"கடந்த 15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்ககூடிய வரி வருவாய்ப் பங்கினை 41 விழுக்காடாக உயர்த்தினார்கள்.

ஆனால் 33.16 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது.ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிக நிதி பெரும் சுமையை ஏற்படுத்துகிறது.ஒன்றிய வருவாயில் மாநிலங்களுக்கான பங்கு 50 விழுக்காடு உயர்த்தப்படுவதுதான் முறையானதாக இருக்கும்.

'P.M.SHRI' திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சில மாநிலங்கள் கையெழுத்து போடாததால், S.S.A. நிதி மறுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, 2024-2025-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட ரூ.2,200 கோடி நிதி தமிழ்நாட்டுக்கு மறுக்கப்பட்டுள்ளது.தாமதமின்றி, ஒருதலைப்பட்ச நிபந்தனைகளை வலியுறுத்தாமல் இந்த நிதியை விடுவிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கியமான ஆறுகளையும், நாட்டிலுள்ள பிற முக்கியமான ஆறுகளையும் சுத்தம் செய்து மீட்டெடுக்கத் திட்டம் தேவை. எனவே, காவிரி, வைகை, தாமிரபரணிக்கு புதிய திட்டத்தை உருவாக்கித் தர வேண்டும்.இந்தத் திட்டங்களுக்கு எல்லாம், ஆங்கிலத்தில் பெயரிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அவற்றை மாநிலங்கள் தங்களது மொழியில் மொழிபெயர்த்துக் கொள்வார்கள்.

நாட்டிலுள்ள நகர்ப்புறங்களின் மேம்பாட்டிற்கு பெருமளவிலான நிதியைக் கொண்ட ஒரு பெரிய திட்டம் அவசியம்.சிறந்த உட்கட்டமைப்பு, இயக்கம் மற்றும் சுகாதாரத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய நகர்ப்புற மறுமலர்ச்சித் திட்டத்தை உருவாக்குவது அவசரத் தேவை. இதுபோன்ற ஒரு திட்டத்தை விரைவில் நீங்கள் உருவாக்கிட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.இந்தக் கருத்துக்கு பலரும் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Emphasis on pm Modi in NITI Aayog meeting 50 percentage tax share of central governments tax revenue should be given to states tn cm


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->