பேரிஜம் ஏரியில் யானை நடமாட்டம்...! - சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக தடை...!
Elephant Movement Berijam Lake Temporary Ban Tourists
பேரிஜம் ஏரி சுற்றுப்பகுதியில் யானைகள் சுதந்திரமாக நடமாடுவது கண்டறியப்பட்டதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை முன்னிட்டு இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதியின் முக்கிய இயற்கைச் சின்னமாக விளங்கும் பேரிஜம் ஏரி, பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு வளாகத்துக்குள் அமைந்துள்ளதால், வழக்கமாக வனத்துறையின் அனுமதியுடன் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்தப் பாதையில் தொப்பித்தூக்கிப் பாறை, மதிகெட்டான் சோலை, வியூ பாயிண்ட், அமைதி பள்ளத்தாக்கு போன்ற அழகிய இடங்களையும் ரசிக்க முடியும்.
இந்நிலையில், மார்ச் 22 பிற்பகல் முதல் யானைகள் தொடர்ந்து அப்பகுதியில் சுழன்று வருவது உறுதி செய்யப்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் விளக்கமளிக்கையில், “யானைகளின் நகர்வை நெருக்கமாக கண்காணித்து வருகிறோம்.
அவை மீண்டும் ஆழ்ந்த வனப்பகுதிக்குள் நகர்ந்தவுடன், சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மீண்டும் வழங்கப்படும்” என தெரிவித்தனர்.
English Summary
Elephant Movement Berijam Lake Temporary Ban Tourists