ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு தேர்தல் கமிஷன் கண்டனம்!
Election Commission condemns Rahul Gandhi's allegation
ராகுல் காந்தியின் தவறான தகவல் சட்டத்தை அவமதிப்பதுடன், அரசியல் மற்றும் தேர்தல் பணியாளர்களுக்கு வேதனை அளிப்பதாக உள்ளதாக தேர்தல் கமிஷன் கண்டனம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, அமெரிக்கா சென்று அங்கு இந்தியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசும்போது , மராட்டிய சட்டசபை தேர்தலில் மோசடி நடந்ததாகவும், அதற்கு தேர்தல் ஆணையம் துணை போனதாகவும் குற்றம் சாட்டினார்.
அதுமட்டுமல்லாமல் மராட்டியத்தில் உள்ள மொத்த மக்களின் எண்ணிக்கையை விட வாக்களித்தவர்களின் எண்ணிக்கை அதிகம். இது ஒரு உண்மை. இது உண்மையில் சாத்தியமற்றது. தேர்தல் ஆணையம் சமரசம் செய்யப்பட்டுள்ளது என்பது எங்களுக்கு மிகவும் தெளிவாகத் தெரிகிறது. அமைப்பில் ஏதோ மிகப் பெரிய தவறு உள்ளது" என்று குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில் இது ஆதாரமற்றது என்று தேர்தல் கமிஷன் ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது. மேலும் ராகுல் காந்தியின் இந்த தவறான தகவல் சட்டத்தை அவமதிப்பதுடன், அரசியல் மற்றும் தேர்தல் பணியாளர்களுக்கு வேதனை அளிப்பதாக உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
English Summary
Election Commission condemns Rahul Gandhi's allegation