தேர்தல் பறக்கும் படையினர் வேட்டை!! இதுவரை எந்த தேர்தலிலும் சிக்காத அளவிற்கு சிக்கிய தொகை!! - Seithipunal
Seithipunalதமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் வரும் ஏப்ரல் 18-ந் தேதி  தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலை௭யில் தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. மேலும் அணைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், தேர்தலில் முறைகேடுகள் ஏதும் நடக்காமல் பார்த்துக்கொள்ள தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது. இதனால் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்தநிலையில் தமிழ்நாட்டில் இதுவரை ரூ.127 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை நடந்து முடிந்த தேர்தல்களைக் காட்டிலும் இது அதிகம்தான் எனவும், இந்திய தேர்தல் ஆணையர் அசோக் லவாசா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கூறுகையில், பணத்தைப் பறிமுதல் செய்ய கடுமையான கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது, மேலும், தேர்தல் முறைகேடுகளில் சம்பத்தப்பட்ட நபர்களை குற்ற நடவடிக்கைக்கு உட்படுத்துவது சம்பந்தப்பட்ட துறைகளிடமே உள்ளது எனவும்  கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election commision


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal