தேர்தல் 2026 : யார் யாருக்கெல்லாம் தபால் வாக்கு...? - தேர்தல் ஆணையம் விளக்கம்
Election 2026 Who get postal votes for whom Election Commission explains
தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தபால் வாக்கு செலுத்தும் வசதி குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதில், 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் என பதிவு செய்யப்பட்டவர்கள் தபால் வாக்கு செலுத்தத் தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வசதியைப் பயன்படுத்த, தகுதி வாய்ந்தவர்கள் Form 12D படிவத்தை நிரப்பி, தேர்தல் அறிவிப்பு வெளியான 5 நாட்களுக்குள் தங்களது பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் (BLO) சமர்ப்பிக்க வேண்டும்.
பின்னர், அதிகாரிகள் நேரடியாக வீட்டுக்கு வந்து வாக்குகளை சேகரிக்கும் முறையில், வெளிப்படையாகவும் பாதுகாப்பாகவும் இந்த செயல்முறை நடைபெறும்.வாக்குப்பதிவு நாளில் பணியில் ஈடுபடும் அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்கும் தபால் வாக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இதில் ரயில்வே, மெட்ரோ, போக்குவரத்து துறை, காவல்துறை, தீயணைப்பு படை, மின்சார வாரியம், ஊடகத்துறை, விமான நிலையம் மற்றும் கடல்சார் துறையினர் உள்ளிட்டோர் இடம்பெறுகின்றனர்.
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், தங்களுக்காக அமைக்கப்படும் வசதி மையங்களில் ரகசியமாக வாக்களிக்கலாம். ராணுவத்தினருக்கு மின்னணு தபால் வாக்கு (ETPBS) அனுப்பப்பட்டு, அவர்கள் அதை பதிவிறக்கம் செய்து வாக்களித்து அஞ்சல் மூலம் திருப்பி அனுப்பலாம்.
மார்ச் 30ஆம் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியாகும் நிலையில், தபால் வாக்குகள் அனைத்தும் மே 4ஆம் தேதி காலை 8 மணிக்குள் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் சென்றடைய வேண்டும் என்பது முக்கிய காலக்கெடுவாகும்.வாக்காளர்களின் வசதியை மேம்படுத்தவும், முழுமையான வாக்குப்பதிவை உறுதி செய்யவும் இந்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
English Summary
Election 2026 Who get postal votes for whom Election Commission explains