மூதாட்டி பாலியல் பலாத்கார வழக்கு: தமிழக அரசுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்!
Elderly woman sexual assault case Womens Commission issues notice to Tamil Nadu government
80 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரவழக்கு தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டி சம்பவத்தன்று இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகில் உள்ள உள்ள சவுக்கு தோப்புக்கு சென்றபோது அங்கு வந்த4 பேர் கொண்ட கும்பல் திடீரென அந்த மூதாட்டியை தாக்கி அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் மூதாட்டி அணிந்திருந்த ¾ பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பி ஓடியது . அப்போது காயமடைந்து கிடந்த மூதாட்டியை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபர்களை தேடி வந்தனர்.இந்த நிலையில், தகவலின் பேரில் காடாம்புலியூரில் உள்ள முந்திரி காட்டுக்கு சென்ற போலீசார் சுந்தரவேலை சுற்றி வளைத்தனர். அப்போது வாலிபர் சக போலீசாரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனை சுதாரித்துக்கொண்ட பண்ருட்டி ஆய்வாளர் வேலுமணி துப்பாக்கியால் சுந்தரவேலின் காலில் சுட்டார். இதில் அவரது இடது காலில் குண்டு பாய்ந்த நிலையில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதையடுத்து சுந்தரவேலை பண்ருட்டி அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். 4 பேரில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றவர்களை போலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், வழக்கை விரைந்து விசாரித்து 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Elderly woman sexual assault case Womens Commission issues notice to Tamil Nadu government