அதிர்ச்சி தகவல் ஏறியது முட்டை விலை !! - Seithipunal
Seithipunal


தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நாமக்கல் மாவட்ட பண்ணை விலையை 4.60 ரூபாயில் இருந்து 5.60 ரூபாயாக உயர்த்தியுள்ளது, கடைகளில் சில்லரை விற்பனையில் முட்டையின் விலை 7 ரூபாயாக உயர்ந்துள்ளது.

"முட்டை நகரம்" என்று குறிப்பிடப்படும் நாமக்கல் மாவட்டத்தில் 1,300க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. மேலும் அதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர் மற்றும் தினமும் இங்கு  5.5 கோடி முட்டைகளை உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கே உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த மார்ச் மாதத்தில் கோடை விடுமுறைக்காக பள்ளிகள் மூடப்பட்டதை அடுத்து அரசு பள்ளிகளுக்கு முட்டை விநியோகம் நிறுத்தப்பட்டது மற்றும் அதிக வெப்பநிலை காரணத்தால் நுகர்வு குறைந்தது. இதனால் கோழி பண்ணையாளர்கள் இழப்பை சந்த்தித்து உள்ளனர். மேலும் தொழிலாளர்களின் செலவுகளை நிர்வகிப்பது கடினமாக உள்ளது என தெரிவித்தனர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் முட்டையின் மொத்த விலை ரூ.4.20 ஆக குறைந்தது. ஆனால், கடந்த மே மாதம் துவங்கிய மழையால் இந்த மாதம் ஜூன் 7ம் தேதி ரூ.4.60 ஆக உயர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை திடீரென ரூ.5.60 ஆக உயர்ந்தது. இதன் காரணமாக, சில்லறை விலை ரூ.6.50 முதல் ரூ.7 வரை உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

egg price has been increased


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->