சுப ஸ்ரீ மரண வழக்கு.. 'சும்மா இருக்க மாட்டோம்' கொந்தளித்த ஈஷா யோகா மையம்.!  - Seithipunal
Seithipunal


கோவையில் இருக்கின்ற ஈஷா யோகா மையத்திற்கு சுபஸ்ரீ என்ற பெண் பயிற்சிக்காக சென்ற நிலையில் மர்மமான முறையில் அங்கிருந்து தப்பியோடி வந்து செம்மேடு பகுதியில் இருக்கும் ஒரு கிணற்றிலிருந்து பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் ஈஷா யோகா மையத்தின் சார்பில் ஒரு கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

 

அதில், "சுபஸ்ரீயின் அகால மரணம் துரதிஷ்டவசமானது. இது யாரும் எதிர்பாராத ஒரு துயர சம்பவம். இந்த சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையும் ஏற்படுத்துகிறது. காவல்துறையின் விசாரணையை திசை திருப்பும் நோக்கில் பலரும் செயல்படுகின்றனர். காவல்துறை விசாரணைக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்று தான் இத்தனை நாட்களாக அமைதியாக இருந்தோம்.

போலீசுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் ஈசா யோகா மையம் வழங்கியுள்ளது. இந்த வழக்கு பற்றி அவதூறுகள் மற்றும் வதந்திகள் பரப்பினால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Eesha yoga mayyam about suba Sri


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->