விவசாயிகளுக்கு முதலமைச்சர் அறிவித்த அறிவிப்பு.. சற்று நிம்மதியில் விவசாயிகள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 69 என அரசுத் சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஆனது, 690 ஆக உயர்ந்துள்ளது. 

நேற்று பாதிப்படைந்த 69 பேரில் 63 பேர் டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்கள். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்ய அவசரகால தொலைபேசி எண்ணை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். வியாபாரிகளை தொடர்பு கொள்ளுதல், சரக்கு போக்குவரத்து அனுமதி, குளிர்சாதன கிடங்கு போன்ற சேவைகளுக்கு உதவி பெறலாம் என தெரிவித்துள்ளார்.

காய்கறிகள் மற்றும் பழங்களை குளிர்பதன கிடங்குகளில் பாதுகாப்பதற்கான கட்டணம் ரத்து. குளிர்பதன கிடங்கு பயன்பாட்டு கட்டணம் ஏப்ரல் 30 வரை வசூலிக்கப்படாது. காய்கறிகள் மற்றும் பழங்கள் சேகரித்து விநியோகம் செய்ய முன்வரும் நிறுவனங்களுக்கு கடன் வசதி என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

edappadi palanisami says about farmers produce


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->