இன்னும் 3 நாட்களே அவகாசம் : உங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பட்டுள்ளதா? எப்படி அதை சரிபார்ப்பது?
EB Aadar connect verification
உங்களின் மின் இணைப்பு எண் உடன் ஆதார் எண் இணைப்பட்டுள்ளதா? என்பதை நீங்களே சரிபார்த்துக்கொள்ளும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
100 யூனிட் இலவச மின்சாரம், மானிய விலையில் மின்சாரம் பயன்படுத்தும் மின் நுகர்வோர்கள் தமிழகத்தில் 2.67 கோடி பேர் உள்ளனர்.
இந்த நிலையில் இவர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கான இணையதளம் மட்டுமின்றி, மின்வாரிய அலுவலகங்களிலும், மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வந்தனர்.
மேலும், இந்த பணிக்காக தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. ஆதார் என்னுடன் இணைக்க கடந்த டிசம்பர் 31-ம் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கால அவகாசம் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார்.
அதன்படி, இன்று, நாளை திங்கள், செவ்வாய் கிழமையுடன் காலா அவகாசம் முடிவடைகிறது. இந்த நிலையில், உங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பட்டுள்ளதா? என்பதை சரிபார்க்க https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhtml என்ற இணையதளத்தில் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்ணை அளித்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளலாம்.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் https://adhar.tnebltd.org/Aadhaar/ இணையதள முகவரியை பயன்படுத்துங்கள்.
English Summary
EB Aadar connect verification