இனிமே சிரமம் இல்லாமல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடலாம்..! - புதிய திட்டம் அறிமுகம்..! - Seithipunal
Seithipunal


விநாயகர் சதுர்த்திக்காக சிலைகளை நிறுவ ஒற்றைச்சாளர முறையை சென்னை பெருநகர காவல்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.

விநாயகர் சிலைகளை நிறுவுபவர்கள் அல்லது நிறுவும் அமைப்புகள் காவல்துறை, தீயணைப்புத்துறை, நகராட்சி அமைப்புகள் என பல்வேறு துறைகளிடம் இருந்தும் முறையாக அனுமதி பெறப்பட வேண்டி இருந்தது. இதனால் பெரும் அலைச்சலாகவும் அவசதியாகவும் இருந்தது.

இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், ஒற்றை சாளர முறையை சென்னை பெருநகர காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஒவ்வொரு காவல் மாவட்டத்திற்கும் காவல் ஆய்வாளர் அந்தஸ்தில் இருக்கும் அதிகாரி ஒருவரை பெருநகர காவல்துறை நியமித்திருக்கிறது.

அந்த  நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளை, விநாயகர் சிலைகளை நிறுவுபவர்கள் சந்தித்து மனு அளிக்க வேண்டும் எனவும், அந்த அதிகாரி சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து அனுமதிகளை பெற்று சிலைகளை நிறுவுபவர்களுக்கு அனுமதி வழங்குவார் என்றும் பெருநகர காவல்துறை தகவல் வெளியுட்டுள்ளது.

மேலும் இதற்காக ஒவ்வொரு காவல் மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது பெருநகர காவல்துறை. இதனால் சிலை நிறுவனருக்கோ எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

easy to celebrate ganesh chathurthi


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal