கோவையில் அதிர்ச்சி; வேறு மாணவர்களுடன் பேசுவதால் ஆத்திரம்; கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய மாணவன்..! - Seithipunal
Seithipunal


கோவை சரவணம்பட்டி பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவன் ஹர்ஷவர்தன், அதே வகுப்பில் படிக்கும் பணவியுடன் நண்பராக பழகி வந்துள்ளார். இருவரிடையே மற்ற மாணவர்களுடன் பேசுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அத்துடன், ஹர்ஷவர்தன் நண்பியான அந்த மாணவியை வேறு சில மாணவர்களுடன் பேசக்கூடாது என அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை கல்லூரிக்கு வந்தபோது இதே விவகாரத்தில் இருவரிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ஹர்ஷவர்தன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மாணவியின் கழுத்து கன்னம் உள்ளிட்ட பகுதிகளில் குத்தியுள்ளார்.

இதனை அடுத்து குறித்த மாணவி பலத்த காயம் அடைந்த நிலையில்,  அதே கல்லூரி குழுமத்தைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விமான நிலையம் பின்புறம் ஆண் நண்பர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டு கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்வலைகள் அடங்குவதற்குள் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A college student stabbed a female student in Coimbatore for talking to other students


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->