67,800 ஆண்டுகள் பழமையான குகை ஓவியம் இந்தோனேஷியாவில் கண்டுபிடிப்பு..!
A 67 800 year old cave painting discovered in Indonesia
இந்தோனேசியாவில் கடற்கரையில் உள்ள முனா தீவில் உள்ள ஒரு குகையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அங்குள்ள ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில் மனிதனால் உருவாக்கப்பட்ட பாறை ஓவியங்களை கண்டுபிடித்துள்ளனர்.
அந்த குகையின் சுவரில் காணப்படும் சிவப்பு நிற கை ஓவியம், இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகவும் பழமையான பாறை ஓவியம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, மற்ற ஓவியங்களில் பறவைகளின் தலைகள் மற்றும் பிற விலங்குகளின் அம்சங்களைக் கொண்ட மனித உருவங்கள் காணப்பட்டன.

குகைச் சுவரில் கைகளை வைத்து, அதன் மேல் நிறமிகளை ஊற்றி இந்த உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் சில விரல் நுனிகள் கூர்மையாக தெரியும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இந்த குகையில் கண்டுபிடிக்கப்பட்ட ஓவியம் சுமார் 67,800 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. அத்துடன், இது ஸ்பெயினில் உள்ள 66,700 ஆண்டுகள் பழமையான நியண்டர்தால் கை அச்சை விட சற்றே பழமையானது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட 73,000 ஆண்டுகள் பழமையான குறியீடுகள் கற்களில் செதுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
A 67 800 year old cave painting discovered in Indonesia