தவெக கட்சிக்கு விசில் போடு.. விஜய்யின் காரை மறித்து போராட்டம் நடத்திய தூத்துக்குடி அஜிதா ஆக்னல்; பொதுமக்களுக்கு விசில், இனிப்பு வழங்கிய கொண்டாட்டம்..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன.  இதனை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் ஆயத்த பணிகளில் இறங்கியுள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக போட்டியிட உள்ளது. அதன்படி 2026-ஆம் ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தலுக்கு  அக்கட்சி விசில் சின்னத்தை பொது சின்னமாக வழங்க இந்திய தேர்தல் கமிஷனில் வேண்டுகோள் விடுத்தது.

இதனை பரிசீலித்த இந்திய தேர்தல் ஆணையம், சலுகை அடிப்படையில் அந்த சின்னத்தை தமிழ்நாடு முழுவதும் அந்த கட்சிக்கு அனுமதித்து கடிதம் அனுப்பி யுள்ளது. அந்தவகையில், த.வெ.க. வுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது. 

இதனையடுத்து, தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிக்கும் ஒரே பொது சின்னமாக விசில் சின்னத்தை தேர்தல் கமிஷன் த.வெ.க.வுக்கு ஒதுக்கியுள்ளது. விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். அத்துடன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தவெக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு விசில் வழங்கி கொண்டாடத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தூத்துக்குடியில் தவெக நிர்வாகி அஜிதா ஆக்னல், பொதுமக்களுக்கு விசில், இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அத்துடன், நிர்வாகிகளுடன் சேர்ந்து அஜிதா ஆக்னல் விசில் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அஜிதா ஆக்னல், சமீபத்தில் த.வெ.க. கட்சிப் பதவி விவகாரத்தில் விஜயின் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதோடு, கட்சித் தலைமை கண்டுகொள்ளாததால் மன அழுத்தத்தில் அதிகளவில் மாத்திரைகள் உட்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து பரபரப்பை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK functionary Ajitha Agnel distributed whistles and sweets to the public in Thoothukudi


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->