98-வது ஆஸ்கர் விருதுக்கு 16 பிரிவுகளில் இடம்பிடித்துள்ள'SINNERS'; வரலாற்றில் முதல்முறை..!
SINNERS has been nominated in 16 categories for the 98th Academy Awards
2026-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 2025ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த 'சின்னர்ஸ்' திரைப்படம் 16 பிரிவுகளில் இடம்பிடித்துள்ளது.
98-வது ஆஸ்கர் விருதுகள் மார்ச் மாதம் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், சிறந்த திரைப்பட விருதுக்கான பொதுப் பட்டியலுக்கு 317 படங்கள் அனுப்பப்பட்டது. அதிலிருந்து தகுதியான 201 படங்களின் பட்டியலை கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இப்படியலில் இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்ட 'ஹோம்பவுண்ட்' திரைப்படமும் இடம்பெற்றிருந்தது.
இந்தப்படங்களிலிருந்து நாமினேட் செய்யப்படவிருக்கும் படங்களின் பட்டியலும், அந்த படங்கள் எந்தப்பிரிவில் படங்கள் இடம்பெற்றிருக்கிறது என்கிற விவரங்களும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியப் படமான 'ஹோம்பவுண்ட்' இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறாமல் போயுள்ளமை ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, ஆஸ்கர் வரலாற்றில் முதல் முறையாக 16 பிரிவுகளில் 'சின்னர்ஸ்' திரைப்படம் இடம்பெற்று வரலாறு படைத்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான இந்த திரைப்படம், வேம்பையர் பின்னணியில் நிறவெறி பற்றிய சுவாரஸ்யமான கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது.
பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்த இந்த திரைப்படம், 2026 ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் 16 பிரிவுகளில் இடம்பெற்று வரலாறு படைத்துள்ளது. அதன்படி, 98-வது ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றிருக்கும் 'Sinners' திரைப்படம், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த அசல் திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கலை இயக்கம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம், சிறந்த ஒலி, சிறந்த VFX, சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடல் மற்றும் சிறந்த நடிகர் தேர்வு என 16 ஆஸ்கர் விருதுகளுக்கு நாமினேட் ஆகியுள்ளது. ஒரு படம் இத்தனை விருதுகளுக்கு நாமினேட் ஆவது ஆஸ்கர் வரலாற்றில் இதுவே முதன் முறையாகும்.

இதற்கு முன்னர், ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் (One Battle After Another) திரைப்படம் 13 பிரிவுகளில் இடம்பிடித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த 98-வது ஆஸ்கர் ரேஸில், சிறந்த நடிகர் விருதுக்கு டிமோதி சாலமேட் (மார்ட்டி சுப்ரீம்), லியோனார்டோ டிகாப்ரியோ (ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்), எத்தன் ஹாக் (ப்ளூ மூன்), மைக்கேல் பி ஜோர்டான் (சின்னர்ஸ்) என பல முன்னணி நட்சத்திரங்கள் இடம்பிடித்துள்ளனர்.
English Summary
SINNERS has been nominated in 16 categories for the 98th Academy Awards