ஆந்திர அரசுக்கு துரைமுருகன் திடீர் கடிதம்: இதுதான் காரணமா? - Seithipunal
Seithipunal


வேலூர், காட்பாடியில் தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்ற போது தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசி இருப்பதாவது, 

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு அடிக்கடி வந்து ஏதாவது மீன் சீக்குகிறதா என முயற்சிக்கிறார். பா.ஜ.க.வுக்கு வட மாநிலம் முழுவதும் தோல்வி தான் மிஞ்சும் என்பதால் தமிழகத்திற்கு மோடி அடிக்கடி வருகிறார். 

10 ஆண்டுகளுக்கு முன்பாகவே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என தெரிவித்தார்கள். தற்போது தேர்தல் வருகிறது என்பதால் டெண்டர் வைத்துள்ளோம் என்கின்றனர். 

இதனால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. பா.ஜ.கவினர், தி.மு.க வாரிசு அரசியல் என சொல்கிறார்கள். நீதிமன்றத்தில் வழக்குகள் எல்லாம் நிலுவையில் உள்ள போது பாலாற்றின் குறுக்கே சட்டத்திற்கு புறம்பாக ஆந்திர அரசு அணையை கட்ட உள்ளனர். 

இவ்வாறு அணை கட்டக் கூடாது என ஆந்திர மாநில நீர்வளத்துறை அமைச்சருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். அந்த கடிதத்தில், மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளது. 

உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என சுட்டிக்காட்டி உள்ளேன். அண்டை மாநிலமான எங்களோடு பேசி இருக்கலாம் பேசாமல் இருப்பது தவறு என குறிப்பிட்டுள்ளேன் என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Duraimurugan letter to Andhra government


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->