அரசு மருத்துவமனைக்கு குடிதண்ணீர் உபகரணங்கள்.. தமுமுக சார்பில் ஏற்பாடு!
Drinking water facilities for the government hospital arranged by DMK
பேரூர் கிளை தமுமுக சார்பாக தமுமுக 31ஆம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு வடகரை அரசு மருத்துவமனைக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் வடகரை பேரூர் கிளை தமுமுக சார்பாக தமுமுக 31ஆம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு வடகரை அரசு மருத்துவமனைக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கிளைத்தலைவர் மைதீன் தலைமை தாங்கினார், மமக செயலாளர் அமான், துணை தலைவர் முகம்மது இலியாஸ், பொருளாளர் அனஸ் பட்டாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மமக மாவட்ட செயலாளர் சலீம் அவர்கள் சிறப்புரையாற்றினார். சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் மெஷினை மாநிலதுணை பொதுச்செயலாளர் மைதீன்சேட்கான் மற்றும் பேரூராட்சிமன்ற தலைவர் சேக்தாவூது ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் கேரளா கலெக்சன் ரஹ்மத்துல்லா, அச்சன்புதூர் கிளைத்தலைவர் அகமது அலி ரஜாய், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், கட்டமியான், ஐபிபி செயலாளர் முத்துமுகம்மது, மமக துணை செயலாளர் மைதீன்பிச்சை உட்பட உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
English Summary
Drinking water facilities for the government hospital arranged by DMK