திரெளபதி பட ரிலீசுக்கு முன்பே படத்திலிருந்து காட்சியை வெளியிட்ட படக்குழு!
draupathi movie video
பழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன் இயக்கத்தில் தயாரிப்பாளர் இல்லாத கிரவுட் ஃபண்டிங் என்ற முறையில் உருவாக்கப்பட்டுள்ள படம்தான் திரௌபதி. இந்த படமானது சமூகத்தில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் நாடக காதல் குறித்து மிகவும் எதார்த்தமான கதையுடன் களம் இறங்குகிறது திரௌபதி. இந்தப்படத்தின் ட்ரைலர் ஜனவரி 3 இல் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட ஐந்து மணி நேரங்களில் தமிழகம் முழுவதும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த நிலையில், திரௌபதி திரைப்படத்தின் U\A சான்றிதழ் நேற்று வழங்கியுள்ளனர். மேலும் இந்த படம் பிப்ரவரி 28 வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.
தற்போது, அந்த படத்தின் ஒரு காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.