பயணிகள் கவனத்திற்கு...! திருச்சி - பாலக்காடு ரயில் நிறுத்தங்களில் அதிரடி மாற்றம்! - பராமரிப்பு பணி தீவிரம்...! - Seithipunal
Seithipunal


கரூர்-திருச்சி ரெயில் வழித்தடத்தில் நடைபெற்று வரும் தண்டவாள பராமரிப்பு பணிகளால், சில ரெயில் சேவைகளில் தற்காலிக மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் முன்கூட்டியே தகவலை அறிந்து பயணத் திட்டங்களை மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

அதன்படி, பாலக்காடு டவுனில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படவிருந்த பாலக்காடு டவுன்- திருச்சி சந்திப்பு எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16844), வரும் 1, 2, 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் குளித்தலை ரெயில் நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோல், திருச்சி சந்திப்பில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் திருச்சி – பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16843), 1-ந்தேதி எலமானூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தம் செய்யப்படும்.

மேலும், அதே ரெயில் 2, 4 மற்றும் 5-ந்தேதிகளில் முத்தரசநல்லூர் ரெயில் நிலையத்தில் தற்காலிக நிறுத்தத்துடன் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாற்றங்கள் குறித்து சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெளிவாக தெரிவிக்கப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dramatic changes at Trichy Palakkad train stops Maintenance work full swing


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->