தேவேந்திர குல வேளாளர்களுக்கு பட்டியல் விலக்கம் கேட்கும் டாக்டர் ராமதாஸ்!
Dr Ramadoss tweet about devendrakula velalar
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக வசிக்கும் பள்ளன், காலாடி குடும்பன், தேவேந்திர குலத்தான், காடையன், பண்ணாடி ஆகிய சாதிகளை பொதுவான ஒரு பெயராக தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் அழைக்க நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இந்த கோரிக்கையை டாக்டர் கிருஷ்ணசாமி, டாக்டர் ராமதாஸ், ஜான் பாண்டியன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை இந்த கோரிக்பையை நிறைவேற்றும் விதமாக அறிவிப்பை வெளியிட்டது. இதனை மத்திய அரசும் உறுதி செய்தது. இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள அரசாணையில் மேற்கண்ட சாதிகளைச் சார்ந்தவர்களுக்கு தேவேந்திரகுல வேளாளர் என்ற பொது பெயரில் சாதி சான்றிதழ் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதனை வரவேற்றுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மேலும் அவர்களுக்கு பட்டியல் விலக்கம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவானது, " பள்ளர், காலாடி உள்ளிட்ட 6 சாதியினருக்கு தேவேந்திரகுல வேளாளர் என்ற பொதுப் பெயரில் சாதி சான்றிதழ் வழங்க தமிழக அரசு ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பட்டியல் விலக்கம் உள்ளிட்ட அச்சமூகத்தினரின் மற்ற கோரிக்கைகளையும் அரசு விரைவில் நிறைவேற்ற வேண்டும்!" என தெரிவித்துள்ளார்.
English Summary
Dr Ramadoss tweet about devendrakula velalar