ஈரோடு || மனித வேட்டையை தொடங்கினால் மக்கள் தாங்க மாட்டார்கள் - மொத்தமாக முடிவு கட்டியே ஆகவேண்டும் - மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


உயிர்ப்பலி வாங்கும் கள்ள லாட்டரிக்கு தமிழக அரசு முடிவு கட்ட வேண்டும் என்று, பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

"ஈரோடு எல்லப்பாளையத்தைச் சேர்ந்த  இராதாகிருஷ்ணன் என்ற நூல் வணிகர் கள்ள லாட்டரியில் ரூ.62 லட்சத்தை இழந்ததால் ஏற்பட்ட விரக்தி காரணமாக  தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்  என்ற செய்தி வேதனையளிக்கிறது. இது குறித்து காணொலி வாக்குமூலமும் வெளியிட்டுள்ளார்!

தமிழ்நாட்டில் லாட்டரி தடை செய்யப்பட்டு 18 ஆண்டுகள் ஆகி விட்டன. அதன்பிறகும் லாட்டரி விற்பனை தொடர்கிறது; ஒருவரே ரூ.62 லட்சத்தை இழந்திருக்கிறார் என்பதிலிருந்தே தமிழ்நாட்டில் கள்ள லாட்டரி விற்பனை எந்த அளவுக்கு புரையோடியிருக்கிறது  என்பதை உணர முடியும்!

ஏற்கனவே ஒருபுறம் ஆன்லைன் சூதாட்டம் உயிர்களை பலி வாங்கும் நிலையில், கள்ள லாட்டரியும் மனித வேட்டையை தொடங்கினால் மக்கள் தாங்க மாட்டார்கள். அதனால், தமிழகத்தில் கள்ள லாட்டரியை  அடியோடு ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்"

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Say About Erode Radhakrushnan Death issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->