வன்னியர் உள் ஒதுக்கீடு... ஐரோப்பாவில் இருந்து வந்த வாழ்த்து செய்தி.! - Seithipunal
Seithipunal


வன்னியர்களுக்கு கிடைத்த இந்த 10.5% இட ஒதுக்கீடு கிடைத்ததற்கு ஐரோப்பாவில் இருந்து மருத்துவர் இராமதாசுக்கு தொடர்பு கொண்டு வன்னியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இது குறித்து மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், " உலகெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்கள் எனக்கு தொலைபேசியில் அழைத்து நன்றி கூறி கொண்டிருக்கிறார்கள். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை பூர்விகமாகக் கொண்ட, ஜெர்மன் மற்றும் ஐரோப்பா வாழ் தமிழர்கள் நல சங்கத்தின் தலைவர் திரு. பிரேம்குமார் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு வன்னியர் சமுதாயத்திற்கு 10.5% இட ஒதுக்கீடு பெற்று கொடுத்ததற்காக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். 

அவர் பேசும்போது "தமிழக மக்களுக்கு இட ஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வை உருவாக்கியதும், ஒவ்வொரு சமுதாயமும் நமக்கு எத்தனை சதவீதம் என கேட்க ஆரம்பித்திருப்பதும் உங்கள் சமூகநீதி போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி அய்யா. தமிழக மக்கள் அனைவருக்கும் அவரவர் உரிமைகளை பெற்று தரும் உங்கள் போராட்டம் தொடர வேண்டும், வெல்ல வேண்டும்.

வன்னியர்களுக்கு கிடைத்த இந்த 10.5% இட ஒதுக்கீடு, அந்த சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தினை, வளர்ச்சியை கொடுக்கப்போகிறது என்பதையும் தாண்டி ஒரு மிகப்பெரிய சமுதாயம் வளர்ச்சி அடையும் பொழுது ஒட்டுமொத்த தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என்பதை நினைக்கையில் எங்களுக்கெல்லாம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அய்யா. அதற்காக உங்களுக்கு  ஜெர்மன் மற்றும் ஐரோப்பா வாழ் தமிழர்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் அய்யா என பேசினார் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss received greetings from europe for vanniyar reservation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal