சின்ன சின்ன ஆசைகளை பகிர்ந்த பாமக நிறுவனர் டாக்டர் இராமதாஸ்...! - Seithipunal
Seithipunal


மருத்துவர் ராமதாஸ் தனது சின்ன சின்ன ஆசைகளை பற்றி முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், பாட்டாளி மக்களின் கட்சியின் நிறுவனருமான மருத்துவர் ராமதாஸ் அவர்கள் சமூக பிரச்சனைகள் அல்லது பாராட்டுகளை தனது சமூக வலைதள பக்கம் மூலம் பகிர்ந்துள்ளார்.

ஆனால் தற்போது அவர் தனது சின்ன ஆசைகள் என்னவென்று தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சின்ன சின்ன ஆசை...
சிறகடிக்க ஆசை!

என்ன இந்த பூமி? என்பதையறிய
எனது கொள்ளுப்பேரன்,
பேத்திகளுடன் சுற்றி வர ஆசை

வீட்டுக்குள் நடக்கும் ஓட்டப்பந்தயத்தில்
அவர்களை முந்தும் வேகத்தில் ஓடி,
அவர்களிடமே கைத்தட்டல் வாங்க ஆசை!

எனக்கிருக்கும் கொள்ளுப்பேரன்,பேத்திகள்
நால்வருடன் சேர்ந்து ஐந்தாவதாக நானும்
ஒரு குழந்தையாக மாறி குதூகலிக்க ஆசை!

கொள்ளுப்பேரன், பேத்திகளுடன் சேர்ந்து
கற்பனை விமானத்தில் விண்ணுக்குப்
பறந்து நிலவைத் தொட்டுவிட ஆசை!

அங்கு பல நூற்றாண்டுகளாக வடை
சுட்டு விற்கும் பாட்டியிடம் உங்களின்
வாடிக்கையாளர் யார்? என்று கேட்க ஆசை!

கரு மேகங்களாக மாறி பூமி மீது மாதம் மும்மாரி
மழையாய் பொழிந்து மக்களை நனைக்க,
உழவர்களை மகிழ்ச்சிப்படுத்த ஆசை!

மருத்துவம் படிக்க விரும்பும்
மாணவர்களைக் கொல்லும்
நீட் தேர்வைக் கொல்ல ஆசை!

சிறுதானியங்களான கம்பு, ராகி, சோளம்,
தினை, வரகு, சாமை, குதிரைவாலி ஆகியவை
அமோகமாக விளைவதை பார்க்கத் தான் ஆசை!
அவ்வாறு விளைந்த சிறு தானியங்களை
கிழமைக்கு ஒன்றாக மக்கள் தின்று நோயின்றி
வாழ்வதைக் கண்டு மகிழத் தான் ஆசை!

சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் மறைந்து
எங்கும் மிதிவண்டிகளில் மக்கள் உற்சாகமாக
பயணிப்பதைக் கண்டு சபாஷ்’ சொல்ல ஆசை!

மகிழ்ச்சியுடன் மனைவி ஈன்றெடுத்த குழந்தை
பெண்ணாக பிறந்து விட்டதே; பிள்ளையாக பிறக்க வில்லையே
என்று புலம்பும் ஜென்மங்களின் தலையில் ஓங்கிக் கொட்ட ஆசை!

என்று தனது சின்ன சின்ன ஆசைகளை தனது முகநூல் பக்கத்தின் வழி பகிர்ந்துள்ளார் மருத்துவர் இராமதாஸ்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss FaceBook Post


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal