நிவர் புயல்: பாதிக்கப்பட்டவர்களுக்கு பா.ம.க.,வினர் உதவ வேண்டும் - மருத்துவர் அன்புமணி இராமதாஸ்..! - Seithipunal
Seithipunal


நிவர் புயல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பா.ம.க.,வினர் உதவ வேண்டும் என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் ட்விட் பதிவு செய்துள்ளார்.

இது குறித்த ட்விட்டில், " நிவர் புயல் கரையைக் கடந்துள்ளது. அஞ்சிய அளவுக்கு பாதிப்புகள் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பல இடங்களில் பயிர்களுக்கு சேதம் உள்ளிட்ட பாதிப்புகளும், சென்னையின் புறநகரில் பல அடி அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ள நிலையும் ஏற்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்; பாதிக்கப்பட்ட மக்களுக்கும், உழவர்களுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். தேங்கியுள்ள நீரை உடனடியாக வெளியேற்றி நோய்ப்பரவலைத் தடுக்க வேண்டும்.

நிவர் புயல் மற்றும் மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான உதவிகளை, முககவசம் அணிந்துகொண்டு, தேவையான பாதுகாப்புடன் பாமகவினர் வழங்க வேண்டும். உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Request to Party Members to help Peoples affected Nivar Cyclone


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal