காற்றுக்காக திறந்த கதவு... கச்சிதமாக களமிறங்கிய திருடன்...! தூத்துக்குடியில் ரூ.4 லட்சம் நகை மாயம்...!
door opened air thief who made perfect move 4 lakh worth jewelry disappeared Thoothukudi
தூத்துக்குடி அருகே வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு குடும்பத்தினர் வராண்டாவில் தூங்கியதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர், நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான 4 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை பிடிக்க காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள நடுக்கூட்டன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி கல்யாணி, வயது 61. கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி இரவு, வீட்டில் காற்றோட்டம் இருக்க வேண்டும் என்பதற்காக கதவை திறந்து வைத்துள்ளனர். பின்னர் குடும்பத்தினர் அனைவரும் வீட்டின் வராண்டாவில் படுத்து தூங்கியுள்ளனர்.

குடும்பத்தினர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர், திறந்து கிடந்த கதவு வழியாக வீட்டுக்குள் நுழைந்ததாகத் தெரிகிறது. பின்னர் சத்தம் ஏற்படாத வகையில் பீரோவை திறந்து, அதில் இருந்த 4 சவரன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.நகைகள் காணாமல் போனது உடனடியாக தெரியாத நிலையில், ஆகஸ்ட் 26-ஆம் தேதி பீரோவை பார்த்தபோதுதான் கல்யாணிக்கு திருட்டு சம்பவம் தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். காவல் ஆய்வாளர் பொறுப்பு ஜூடி தலைமையில் தனிப்படை விசாரணையும் நடைபெற்று வருகிறது.
சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்கள் குறித்த தகவல்களை காவலர்கள் சேகரித்து வருகின்றனர். மேலும், அருகிலுள்ள வீடுகள் மற்றும் முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் கதவு திறந்து கிடந்ததை பயன்படுத்தி நகைகளை திருடிச் சென்ற மர்ம நபரை விரைவில் கைது செய்ய காவலர்கள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
door opened air thief who made perfect move 4 lakh worth jewelry disappeared Thoothukudi