"டூநாட் டூ காமெடி விஜய்"! அவரை நம்பி நாங்க இல்ல.. விஜய் என்ன அவதார புருஷனா..?-ஆர்.பி உதயகுமார் விளாசல்! - Seithipunal
Seithipunal


மதுரை பாரபத்தியிலான தவெக மாநாட்டில் பேசிய அக்கட்சித் தலைவர் விஜய்,
“தமிழக அரசியலில் எம்ஜிஆர் ஒரு மாஸ். ஆனால் அவர் தொடங்கிய கட்சியை இன்று யார் காப்பாற்றுகிறார்கள்? அதிமுகவில் அப்பாவி தொண்டர்கள் தவிக்கிறார்கள். தாமரை இலையில் தண்ணியே ஒட்டாது... தமிழ்நாடு ஒட்டுமா? பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ள உலக மகா ஊழல் கட்சி அதிமுக” என்று கடுமையாக விமர்சித்தார்.

இதற்கு பதிலளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்,*“தவெக தலைவர் விஜய் ஒன்றரை ஆண்டாக கை குழந்தையாக உள்ளார். தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷன் போல விஜய் நினைத்துக்கொள்கிறார். மக்களே அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். யாரும் கட்சி தொடங்கலாம், மாநாடு நடத்தலாம், ஆனால் பேசுவதற்கு ஒரு வரைமுறை உண்டு.

விஜயின் அரசியல் ஆசான் யார் என்பது கூட தெரியவில்லை. அண்ணா, எம்ஜிஆரை தவிர்த்து தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாததால் அவர்களை வைத்து பேசுகிறார். அதிமுக குறித்து விஜய் விமர்சனப் பேச்சுகளை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கட்சி தொடங்கியவுடனே ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைப்பது வெறும் கனவு.

அதிமுக தொண்டர்கள் மனவேதனையில் உள்ளார்கள் என்பதை விஜய் எப்படித் தெரிந்து கொள்வார்? எந்த அதிமுக தொண்டரிடம் விஜய் பேசினார்? யாரோ ஒருவரின் தூண்டுதலில் தான் இப்படிப் பேசியிருக்கிறார்”* என கடும் எதிர்வினை தெரிவித்தார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Donot do comedy Vijay We don't trust him What kind of person is Vijay RP Udayakumar Vilasal


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->