'1 லட்சம் ஏக்கர் கோவில் சொத்துகளை இழந்துள்ளோம், 06 ஆயிரம் மாடுகளை காணவில்லை' என்கிறார் அண்ணாமலை..!
Annamalai says it has lost 1 lakh acres of temple property and 6000 cows are missing
கடந்த 1986-இல் இருந்து தற்போது வரை 01 லட்சம் ஏக்கர் கோவில் சொத்துக்களை நாம் இழந்துள்ள்ளதாகவும், திருச்செந்தூரில் கோவிலுக்கு கொடுத்த 16 ஆயிரம் மாடுகளை காணவில்லை எனவும், தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இன்று கோவை, மேட்டுப்பாளையத்தில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு தமிழக பா.ஜ.முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். அப்போது, அவர் கூறியதாவது: 2026 தேர்தலுக்காக ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கும் நாம், அடக்கு முறையை அடக்க வேண்டும், ஒடுக்க வேண்டும் என மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தமிழகத்தில், புதிதாக விநாயகர் சிலையை வைக்க முடியவில்லை. அரசின் அடக்க முறை தொடர்கிறதாகவும், விநாயகர் சிலையை உடைத்தவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். விநாயகர் சதுர்த்தி விழாவில் சாதி பார்ப்பது கிடையாது. பணக்காரன் பார்ப்பது கிடையாது. அனைவரையும் ஒருங்கிணைக்கும் விழாவாக உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், எதிர்வரும் செப்டம்பர் 10-இல் கேரள மாநிலம் பம்பாவில் கம்யூனிஸ்ட் அரசு நடந்தும், அனைத்துலக ஐயப்பன் சபரிமலை மாநாடுக்கு முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளனர். அவரை -பாஜ கேரளாவில் கால் வைக்க விட மாட்டோம் என்றோம். உடனே ஒரு அரசு விழாவை ஏற்பாடு செய்து எனக்கு பதிலாக அமைச்சர் தியாகராஜன் கலந்து கொள்வார் என ஸ்டாலின் சொல்கிறார் என்று விமர்சசித்துள்ளார்.
அத்துடன், உங்களுடன் ஸ்டாலின் என்பது ஆள் இல்லாத கடையில் டீ ஆத்துவது போல் உள்ளது என்றும், மனுக்களை வைகை ஆற்றில் போட்டு செல்கிறார்கள் என்று திமுக அரசை சாடியுள்ளார். 1986-இல் இருந்து தற்போது வரை 1 லட்சம் ஏக்கர் கோவில் சொத்துக்களை நாம் இழந்துள்ளதாகவும், திருச்செந்தூரில் கோவிலுக்கு கொடுத்த 16 ஆயிரம் மாடு காணவில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், காலை உணவு திட்டம் மாணவர்களுக்கு உப்புமா போடுகிறார்கள் மாணவர்களை உப்புமா சாப்பிட வைத்தது தான் இந்த ஆட்சியின் சாதனை என்றும், 4.78 லட்சம் ஏக்கர் கோவில் சொத்தினால் வரக்கூடிய வருமானம் குறித்து தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஹிந்து அறநிலைத்துறை இதுவரை சி.ஏ.ஜி.க்கு எந்த ஆவணமும் கொடுக்கவில்லை என்றும் இது குறித்து, ஆய்வு நடத்தப்படவில்லை என்றும், கோவில்களில் தங்கம் எவ்வுளவு உள்ளது போன்ற சொத்துக்களின் விவரங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Annamalai says it has lost 1 lakh acres of temple property and 6000 cows are missing