வெறிபிடித்து கடித்து குதறும் நாய்.. 10 பேர் மருத்துவமனையில் அனுமதி.!
Dog bite in karur 10 peoples admitted hospital
கரூர் மாவட்டத்தில் வெறி நாய் கடித்ததில் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பகுதியில் கடந்த சில நாட்களாக கழுத்தில் பெல்ட் அணிந்த ஒரு வெளிநாய் சுற்றி திரிகிறது. அந்த நாய் யாரோ ஒருவர் இந்த நாயை வீட்டில் வளர்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சாலையில் நடந்து செல்பவர்களையும், வாகனத்தில் செல்பவர்களையும் இந்த நாய் துரத்தி துரத்தி கடித்துள்ளது. கடந்த சில நாட்களாக 10-க்கும் மேற்பட்டோரை இந்த நாய் கடித்து குதறியது.

இதனையடுத்து காயமடைந்தவர்கள் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் நகராட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் வெறிபிடித்து சுற்றும் நாயை பிடிப்பதற்கு முற்பட்டு வருகின்றனர்.
English Summary
Dog bite in karur 10 peoples admitted hospital