குறைந்து வந்த ஒகேனக்கல்லில் நீர்வரத்து எவ்வளவு தெரியுமா?
Do you know how much water flow has decreased in Okenakkal
கர்நாடகா மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்வதால், கபினி அணைக்கும், கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து அவருகிறது.
இதன் காரணமாக இந்த 2 அணைக்களிலிருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று தர்மபுரி மாவட்டம் சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லுக்கு 20000 கனஅடியாக தணண்ணீர் வந்தது.

தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்துள்ளது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 17000 கன அடியாக தண்ணீர் குறைந்து வந்தது.இருப்பினும், சினிபால்ஸ், ஐந்தருவி, மெயின் அருவி, உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதில் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தும், மெயின் அருவியில் ஆனந்தமாக குளித்தும் மகிழ்ந்தனர். மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள், காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
English Summary
Do you know how much water flow has decreased in Okenakkal