பிரமாண்டமாக தொடங்கிய இளைஞரணி மாநாடு - சேலத்தில் குவிந்த இளைஞர்கள்.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் தி.மு.க. இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு இன்று நடைபெறுகிறது. திமுகவில், இளைஞர் அணி தொடங்கப்பட்ட பிறகு முதல் மாநாடு கடந்த 2007-ம் ஆண்டு திருநெல்வேலியில் நடைபெற்றது. 

தற்போது இரண்டாவது மாநாடு சேலத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்காக சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெத்தநாயக்கன்பாளையம் அருகில் சுமார் 2 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாநாட்டு திடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வருகை தந்தனர். இதில், மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக தி.மு.க. கட்சி கொடியை துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. ஏற்றி வைத்து திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு அரங்கு திறந்து வைக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dmk youth wing conference 2024 meeting in salem


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->